ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 14 Second

பார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

ஐரோப்­பிய கால்­பந்து பெட­ரேஷன் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்­னணி கால்­பந்து அணி­யான பார்­சி­லோ­னாவும், இத்­தா­லியின் முன்­னணி கழக அணி­யான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சம­நி­லையில் முடிந்­தது.

சம­நி­லையில் முடிந்­ததால் பார்­சி­லோனா அணி காலி­று­திக்கு முந்­தைய 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

யுவான்டஸ் இன்னும் 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­ற­வில்லை. வழக்­க­மாக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒருவ­ருக் ­கொ­ருவர் கட்­டிப்­பி­டித்து கொள்­வார்கள். பின்னர், தாங்கள் அணிந்­தி­ருக்கும் ஜெர்­சியை ரசி­கர்கள் நோக்கி வீசுவார்கள்.

நேற்­றைய போட்­டியில் யுவான்டஸ் தலை­வரும், இத்­தாலி அணியின் முன்னாள் தலை­சி­றந்த கோல் காப்­பா­ள­ரு­மான பபன், யாரும் எதிர்­பார்க்­காத வகையில் திடீ­ரென தன்­னு­டைய காற்­சட்­டையை கழற்றி கோல் கம்­பத்­திற்கு பின்னால் இருந்த ரசி­கரை நோக்கி வீசினார்.

பின்னர் உள்­ளா­டை­யுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடினார். இது அங்குள்ளவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்..!!
Next post ஆண்களின் கலவியில் ஒரு சுகம்..!!