மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்ட விஷால்..!!

Read Time:1 Minute, 51 Second

மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால் இணைந்து நடித்துள்ள படம் ‘வில்லன்’. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்கும் இதில் விஷால் வில்லனாக நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் விஷால் நடித்திருக்கும் முதல் படம் இது. இதில் நடித்த அனுபவம் பற்றி கூறிய விஷால்…

“இந்த படத்தில் நடித்தபோது மோகன்லால் குடும்பத்தினர் என்னை மிகவும் அன்பாக கவனித்துக்கொண்டனர். இதை என்றும் மறக்கமாட்டேன்.

கிளைமாக்ஸ், ஆக்‌ஷன் காட்சியில் நடிப்பதும் சவாலாக இருந்தது. மோகன்லால் சாரும், நானும் நேருக்குநேர் மோத வேண்டும். அவர் முன் நின்று கொண்டு மலையாளத்தில் பேச வேண்டும். அப்போது ஒரு பெரிய நடிகர் முன்பு நிற்கும் போது ஏற்பட்ட பயத்தை மறைக்க வேண்டியது இருந்தது. ஏதோ அப்போது தான் நடிக்க வந்தது போன்று உணர்ந்தேன். என் இதய துடிப்பு வேகமாக இருந்தது.

மோகன்லால் கண்களை பார்த்து வசனம் பேசுவது கஷ்டமாக இருந்தது. எத்தனையோ படங்களில் நடித்தும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. கிளைமாக்ஸ் காட்சியில் மோகன்லாலை நான் அடிக்க வேண்டியது இருந்தது. அவரை நான் அடிக்கும் காட்சி படமானதும் அவரிடம் ‘சாரி…சாரி’ என்று பலமுறை மன்னிப்பு கேட்டேன். அந்த நாளை மறக்கவே முடியாது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு செலவு செய்ய என்னிடம் எப்போதும் பணமோ கிரெடிட் கார்டோ இருக்காது: அம்பானி..!!
Next post உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்..!! (கட்டுரை)