தொந்தி கொழுப்பை குறைக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:3 Minute, 31 Second

தொந்தி உடல்நலத்திற்கும் தீங்கானது. இதுபோன்ற கொழுப்புதான் வகை -2 நீரிழிவு நோய்க்கும். இதய நோய்க்கும் முக்கியமான காரணமாக உள்ளது. தொந்திக் கொழுப்பைக் குறைத்து ஆரோக்கிய மேம்பாட்டைப் பெற உதவும் ஆரோக்கிய வழிமுறைகளை பார்க்கலாம்.

* கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான மண்டலத்தின் வழியே குறைந்த நேரத்தில் பயணித்து முடிக்கின்றன, இதனால் வயிறு நிறைந்த உணர்வும் விரைவில் வந்துவிடுகிறது. அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தானது, பல ஆண்டுகளாகச் சேர்ந்த தொந்திக் கொழுப்பைக் குறைப்பதில் நேரடியாகவே உதவுவதாக ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்தானது ஆளி விதைகள், வெண்ணெய், ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிகமுள்ளது.

* குறைவான அளவு மது அருந்துவதில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் அதிகம் அருந்தினால் நல்லதல்ல. அதிகம் மது அருந்துவதற்கும், வயிற்றுப் பகுதியில் சதை கூடுவதற்கும் தொடர்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் மதுவை முற்றிலும் விட்டொழிக்க வேண்டியதில்லை, அருந்தும் அளவைக் குறைத்து சராசரியாகப் பராமரித்தால் போதும்.

* கார்டியோ பயிற்சிகள், அதாவது ஏரோபிக் பயிற்சிகள் கலோரிகளை எரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தவை. உடற்பயிற்சியின் கடினத்தன்மை வேறுபடலாம், ஆனால் உடற்பயிற்சி செய்யும் நேர அளவும் எத்தனை முறை உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற எண்ணிக்கையும் தான், எவ்வளவு தொந்திக் கொழுப்பு குறைகிறது, எவ்வளவு வேகத்தில் குறைகிறது என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் என்று கருதப்படுகிறது. சர்க்கரையில் பிரக்டோஸ் உள்ளது, இதை கல்லீரலின் மூலம் மட்டுமே வளர்சிதை மாற்றமடையச் செய்ய முடியும். கல்லீரலில் கிளைக்கோஜன் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது, பிரக்டோசை அது கொழுப்பாக மாற்றி, இடுப்புப் பகுதியில் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் பானங்களும் உடல் பருமனுக்குக் காரணமாக உள்ளன.

சிறந்த பலன் கிடைக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி, உடற்பயிற்சியையும் தவறாமல் செய்துவந்தால் உங்கள் ஆரோக்கிய வாழ்க்கையை எளிதில் அடையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `சங்கமித்ரா’வுக்கு முன்னதாக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்..!!
Next post உ.பி.: பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமி மானபங்கம்..!!