மனைவியின் உடலை அன்று பரிதாபமாக தோளில் சுமந்து சென்றவர் இன்று இரு சக்கர வாகனத்தில்..!!

Read Time:1 Minute, 39 Second

அன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த புகைப்படம் இணையங்களிலும் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில், மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய பலர் முன்வந்தனர்.

பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 இலட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது.

மறுமணம் செய்துகொண் மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்..!!
Next post அஜித், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை..!!