இதை வைத்து 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்: தேவையற்ற முடிகளை நீக்கலாம்..!!

Read Time:2 Minute, 57 Second

கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வது அழகு தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று. இவ்வாறு தேவையற்ற இடங்களில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளது.

அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் வழிகள்

டேபிள் ஸ்பூன் அயோடின் மற்றும் 1 கப் பேபி ஆயில் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து அதை முடி உள்ள கை, கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 10 டேபிள் ஸ்பூன் நீர் கலந்து, முடி உள்ள பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி கைகளால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நீரில் ஊறவைத்த துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் அரைத்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை முடி உள்ள பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் கழித்து மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து அதை முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை கலந்து, அதை தேவையற்ற முடி உள்ள இடத்தில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பப்பாளியின் தோலை நீக்கி அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து, அதை முகம், கை, கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவு, மஞ்சள் தூள், பிரஷ் க்ரீம் மற்றும் பால் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலந்து, முடி உள்ள இடத்தில் தடவி 20-30 நிமிடம் ஊறவைத்து நீரில் கழுவ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் காமத்தின் உச்சத்தில் இருக்கும் நேரங்கள்..!!
Next post ஒரு மாத காலமாக ராஜா ராணி செம்பாவை பின்னால் சுற்ற வைத்த காதலன் இவர்தான்..!!