கருப்பு திராட்சையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுங்கள்: அற்புதம் இதோ..!!

Read Time:2 Minute, 52 Second

திராட்சை பழத்தில் நம அழகை பாதுகாக்கும் விட்டமின் C மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

இந்த திராட்சை பழத்தினை நம் முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் போன்றவை மறைந்து அழகான மற்றும் ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.

திராட்சையை எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்?

2-3 கருப்பு திராட்சைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து அதில் 1 டீஸ்பூன் யோகார்ட் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

சிறிதளவு திராட்சை பேஸ்ட், க்ரீம், அரிசி மாவு மற்றும் கேரட் சாறு போன்ற அனைத்தையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் திராட்சையை எடுத்து நன்றாக குழைத்து பேஸ்ட் செய்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

திராட்சை பழங்களை மட்டும் அரைத்து நேரடியாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வர, முகம் பளிச்சிடும்.

திராட்சை மற்றும் பப்பாளியை ஒன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

ஆரஞ்ச் ஜூஸை சிறிதளவு எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் அளவு திராட்சை சாறையும் கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும்.

பேக்கிங் சோடா, கோதுமை மாவு மற்றும் திராட்சை போன்றவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேக் போட்டு வர முகம் அழகாகும்.

சிறிதளவு புதினா இலைகளை எடுத்து அதனுடன் திராட்சை மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பேக் போட்டு வரலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!
Next post முதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா..!!