பொங்கலை ‘கலகலப்பு’ பொங்கலாக்க சுந்தர்.சி திட்டம்..!!

Read Time:1 Minute, 33 Second

சுந்தர். சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா நடித்துள்ள படம் ‘கலகலப்பு-2’. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி காரைக்குடியில் தொடங்கியது.

தொடர்ந்து காசி, ராஜஸ்தான், ஐதராபாத் உள்பட பல இடங்களில் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடந்தது. நடிகர்-நடிகைகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். பெரிய நடிகர்-நடிகைகள் பட்டாளம் இருந்தாலும் இந்தமாதம் 4-ந் தேதியுடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சரியாக 60 நாட்களில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் திட்டமிட்டபடி சுந்தர்.சி முடித்து விட்டார். தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி விட்டன.

திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே படம் எடுக்கும் வித்தை தெரிந்த சுந்தர்.சியின் இந்த படத்தை, அவரது மனைவி குஷ்புவின் ஆவ்னி மீடியா தயாரிக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கிறார்.

பொங்கலுக்கு ‘கலகலப்பு-2’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்..!! (வீடியோ)
Next post காதலியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து காதலன் அதிர்ச்சி..!! (வீடியோ)