உலகின் மிக நீளமான 10 ஆயிரம் அடி நூடுல்ஸ் – சீனர்கள் கின்னஸ் சாதனை..!! (வீடியோ)
சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் நூடுல்ஸ் தயாரிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
அதன் மொத்த நீளம் 10 ஆயிரத்து 100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடுல்ஸ் தயாரிக்க, 40 கிலோ ரொட்டி மாவு, 26 லிட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை சேர்க்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற ஒருவர், அதனை நன்றாக பிசைந்து கெட்டியான மாவாக்கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடுல்ஸ் அளவிற்கு உருட்டி பாத்திரத்தில் போட்டனர்.
இதனை சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர். உருட்டும் போதே கின்னஸ் அதிகாரிகள் அதன் அளவை குறித்து வைத்துக்கொண்டனர். இது முழுவதும் கையால் செய்யப்பட்ட நூடுல்ஸ் ஆகும்.
பின்னர் நூடுல்ஸ் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பறிமாறப்பட்டது.
நூடுல்ஸ் சீன பாரம்பரிய உணவாகும். நீளமான நூடுல்ஸை அதிக வாழ்நாளின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர். இந்த முயற்சி அனைவரும் நலமாக பல்லாண்டு வாழ்வதற்காக எடுக்கப்பட்டது என உணவு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் ஜப்பானில் ஆயிரத்து எண்ணூறு அடி நீளத்தில் செய்யப்பட்ட நூடுல்ஸின் அளவை முறியடித்து, சீனா கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating