ஆந்திராவை சேர்ந்தவருடன் ரகுல் பிரீத்திசிங் காதல்?..!!
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். இப்போது தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ரகுல் பிரீத்திசிங்கிடம் அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர்….
“திருமணம் குறித்து நான் இன்னும் திட்டமிடவில்லை. நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்கமுடியாது. எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம். நான் திருமணம் செய்பவர் ஆந்திராவை சேர்ந்தவராக கூட இருக்கலாம்.
நான் யாரையும் காதலிக்கவில்லை. என்னை காதலிப்பதாக எந்த நடிகரும் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.
ரகுல்பிரீத்திசிங்கின் இந்த பதிலால் அவர் ஆந்திராவை சேர்ந்த யாரையாவது காதலிக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுமட்டுமல்ல நான் யாரையும் காதலிக்கவில்லை என்று சொன்னதுடன் நிறுத்தாமல், என்னிடம் எந்த நடிகரும் காதலிப்பதாக சொல்லவில்லை என்றும் பதில் அளித்திருப்பது, இவருடைய மனதில் எந்த நடிகராவது இருக்கிறாரா? என்ற கேள்வியையும் ரசிகர்களிடம் எழுப்பி உள்ளது.
Average Rating