தமிழ் மக்களை மிரட்டி பணம் பறித்த 33 புலிகள் இத்தாலியில் கைது! (விரிவான செய்தி)

Read Time:3 Minute, 1 Second

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 33 பேரை இத்தாலி முழுவதிலும் நடத்தப்பட்டதேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறார்கள் என வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் புலிகள்அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின்மீது, இலங்கை தமிழர்களான இந்த 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல்வேட்டையின் மூலம், இத்தாலியில் புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக இத்தாலியின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டுவௌ;வேறு நகரங்களில் இருக்கின்ற புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப்பொலிஸார் திடீர் தேடுதல் நடத்தினார்கள். இத்தாலியில் வாழும் இலங்கைத்தமிழர்களிடம் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில்மோதலில் ஈடுபடும் புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டுவருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள். இத்தாலியில் இருந்து ஒளிபரப்பான புலிகளின் சட்டவிரோத பிரசார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள். இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறிவாழ்கிறார்கள். பெரும்பாலும் சட்டவிரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியா? உப்பா?: புதிய படத்தால் பரபரப்பு
Next post இந்த வார ராசிபலன் (20.06.08 முதல் 26.06.08 வரை)