தானா சேர்ந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த கார்த்திக்..!!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், சாதனையும் படைத்தது. அனிருத் இசையில் “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான டீசரும் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக் தனது டப்பிங் பணியை முடித்திருக்கிறார். இதையடுத்து, அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களை வெளியிட இருக்கிறார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
Average Rating