ஜெயலலிதாவின் மருத்துவமனை காணொளி வெளியானது… பரபரப்பில் தமிழகம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளது. இது குறித்து புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அவர் குடித்த பழச்சாறு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியானது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காணொளியோ, புகைப்படமோ வெளியிடாதது மக்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தவிருக்கும் சூழ்நிலையில் தினகரன் தரப்பு மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த காட்சியை வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சியில் ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்று காணப்படுகிறது.
Average Rating