மீம்ஸ் போடுபவர்கள் அறிவாளிகள்: மஞ்சிமா மோகன்..!!

Read Time:1 Minute, 34 Second

மஞ்சிமாமோகன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்…

“நான் காலையில் எழுந்த உடன் முதன்முதலில் தேடுவது எனது செல்போனைத்தான். சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்வதற்கும், சமூக பிரச்சினைகளை விமர்சனம் செய்து ‘மீம்ஸ்’ போடுவதற்கும் தனி திறமை வேண்டும். அவர்கள் அறிவாளிகள். கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என்று கருதுகிறேன்.

ஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணைய தளம் மூலம் உரையாடும் போது, விதம் விதமாக கேள்விகளை கேட்கிறார்கள். இதில் விஜய் அல்லது அஜித் இருவரில் யாரைப் பிடிக்கும் என்று ரசிகர்கள் கேட்கும் கேள்வி தான் மிகவும் கஷ்டமானது. அவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கடிமானது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘விக்ரம் வேதா’, ‘பாகுபலி-2’, ‘மெர்சல்’, ‘மாநகரம்’ ஆகியவை எனக்கு பிடித்தமானவை. எனக்கு எதிரான கருத்து தெரிவிப்பவர்களை, எனக்கு எதிராக பேசுகிறவர்களை கண்டு கொள்ளமாட்டேன். ரசிகர்களுடன் இணைய தளம் மூலம் பேசுவது மகிழ்ச்சியான வி‌ஷயம்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுலிக்கு வந்த பிரபோசல்.. அதற்கு ஜுலியின் பதில் என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Next post ஜெயலலிதாவின் மருத்துவமனை காணொளி வெளியானது… பரபரப்பில் தமிழகம்..!! (வீடியோ)