அமெரிக்க ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணை பாகங்கள் திருட்டுப் போய் விட்டன

Read Time:2 Minute, 18 Second

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் இருந்து அணு ஆயுத ஏவுகணைகளின் பாகங்கள் ஆயிரக்கணக்கில் திருட்டு போய்விட்டன. அவற்றை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இதற்கு பெண்டகன் என்று பெயர். இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அணு ஆயுத ஏவுகணைகளின் பாகங்கள் திருட்டு போய்விட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகங்கள் திருட்டுப் போய் இருப்பது அமெரிக்க ராணுவத் தலைமைக்கு கவலையை அளித்து உள்ளது. இந்த ஏவுகணை பாகங்களை இணைத்து தான் அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை உருவாக்கமுடியும். இவற்றை யார் திருடினார்கள் என்பது தெரியவில்லை. திருட்டுப் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார்?அவை தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருக்குமா போன்ற கேள்விகள் எழுந்து உள்ளன. இந்த கேள்விகள் அமெரிக்க அரசாங்கத்தை கவலை அடைய வைத்து உள்ளன. அணு ஆயுத பரவலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அமெரிக்காவிலேயே அணு ஆயுதங்கள் திருட்டுப்போய் இருப்பது உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவை கேலிப்பொருளாக்கி உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானப்படையின் உயர் அதிகாரி, மற்றும் ராணுவத்தளபதி ஆகியோரை ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் பதவி நீக்கம் செய்தார். இந்த திருட்டு காரணமாக அணு ஆயுதங்கள் மீது அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாடு குறித்து மக்கள் மத்தியிலும் உலகநாடுகளிடமும் அவநம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோ: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…