கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 5,300 குழந்தைகள் இணைந்து உருவாக்கிய நுரையீரம் வடிவம்..!!

Read Time:2 Minute, 26 Second

டெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசு அதிகமாகி உள்ளது. இதனால், மனிதனின் நுரையீரலில் கோளாறு ஏற்பட்டு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் உலகத்திலேயே அதிகளவாக இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசு தொடர்பான பிரச்னையால் உயிரிழந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையுடன் பெட்ரோனட் எல்என்ஜி என்ற அமைப்பு இணைந்து, டெல்லியில் நேற்று தியாகராஜ் ஸ்டேடியத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 5,300 குழந்தைகள் பங்கேற்றனர்.

அவர்கள் வரிசையில் நின்று மிகப்பெரிய மனித நுரையீரலை வடிவமைத்தனர். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பங்கேற்றார். அவர் பேசுகையில், சுத்தமான காற்றின் அவசியத்தை வலியுறுத்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவும்.

நமது இலக்கை அடைய குழந்தைகள் தான் சிறந்த தூதுவர்கள்.என தெரிவித்தார். இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் அபுதாபியில் நடந்த நிகழ்ச்சிகள் முந்தைய கின்னஸ் சாதனைகளாக உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் யுவன்..!!
Next post காளையை முட்டும் கன்னுக்குட்டி: பிஞ்சுலையே பழுத்த சிறுவன்..!! (வீடியோ)