காளையை முட்டும் கன்னுக்குட்டி: பிஞ்சுலையே பழுத்த சிறுவன்..!! (வீடியோ)
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தையடுத்து, கடந்த வருடம் ஜனவரி மாதம் மிகப்பெரிய புரட்சி வெடித்ததில் தமிழகமே சென்னை மெரினா கடற்கரையில் தான் இருந்தது.
ஒரு வாரம் இரவு பகலாக நடந்த இந்த போராட்டம், ஒரு திருவிழாவைப் போல தமிழக இளைஞர்கள் முன்னின்று நடத்தி அதற்கான வெற்றியையும் பெற்றனர்.
ஆனாலும் கூட, எதோ திருஷ்டி பட்டாற் போல், இளைஞர்களால் அந்த வெற்றியை நன்றாக கொண்டாட முடியவில்லை. காரணம், போராட்டத்தின் இறுதி நாளில் பொலிசார் தடியடி நடத்தியதில் பல இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு இளைஞனின் உயிரும் பிரிந்தது.அப்படியிருந்தும், வெற்றிக்கு பின் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
காளையை அடக்குவது அவ்வளவு எளிதல்ல, அது உயிருக்கு ஆபத்தான ஒரு விடயம். ஆனாலும், அக்காலத்தில் இளைஞன் காளையை அடக்கினால் தான் பெண் என்ற ஒரு முறை இருந்தது.
இது எதற்காகவென்றால், தமிழக இளஞர்களுக்கு வீரமென்பது, ரத்தத்திலே ஊரிய ஒரு விடயம் என்பதை அவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான்.
இந்த வீடியோவைப் பாருங்கள், சிறுவன் எவ்வாறு காளையுடன் கொஞ்சி விளையாடுகிறான் என்று.
Average Rating