கணவருடன் பக்தி படம் பார்த்த நமீதா..!!

Read Time:1 Minute, 30 Second

நமீதா சமீபத்தில் அவருடைய காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதியர் முதல் முதலில் பார்த்தது ஒரு பக்தி படம். இதன் பெயர் ‘ஹரே கிருஷ்ணா’.

இது இஸ்கான் என்று அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை உருவாக்கிய அ.ச.பக்தி வேதாந்த் சுவாமி பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆவணப்படம்.

1965-ம் ஆண்டு இவர் தன்னுடைய 70-வது வயதில், வெறும் நாற்பது ரூபாய் மற்றும் பகவத்கீதை, பாகவதம் போன்ற இந்திய வேத இலக்கியங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுடன் ஒரு சரக்கு கப்பல் மூலம் அமெரிக்காவை சென்றடைந்தார். பிரபுபாதர், இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவங்களை மேற்கத்திய நாடுகளில் போதித்து தீய பழக்கங்களில் இருந்து அவர்களை விடுவிக்க பாடுபட்டார். ஹரே ராமா ஹரேகிருஷ்ணா இயக்கத்தின் முக்கியத்துவத்தை உணர செய்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலாடையின்றி வந்த பெண் ஆர்ப்பாட்டக்காரர் கைது.!!
Next post புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு..!! (கட்டுரை)