சிம்புவுக்கு கைகொடுக்கும் மோகன் ராஜா..!!

Read Time:1 Minute, 25 Second

மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா, சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இசையை மையமாக வைத்து படம் இயக்குவதாகவும், அதற்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியானது. இப்படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியான வரவேற்பு பெறவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இப்படம் முடிந்த பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ..!!
Next post ஆண்கள் பெண்களிடம் சாபம் வாங்கவே கூடாதாம்…ஏன் தெரியுமா..!!