குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து காதலியை சீரழித்த நடிகர்..!!

Read Time:2 Minute, 48 Second

தன்னுடைய காதலியை கற்பழித்து விட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கிய நடிகரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரண்யா. இவர் ‘ஹோம்பன்னா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அதன்பின் அது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வர திருமணம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், தன்னுடைய முதல் படமான ஹோம்பன்னா வெளிவந்த பின்னரே திருமணம் எனக்கூறி சுப்ரமண்யா தட்டிக் கழித்துள்ளார்.

பின் படம் வெளியான பின்பும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சொந்தமாக ஒரு வீடு கட்டிய பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 1ம் தேதி தன்னுடைய காதலியை தன்னுடைய சகோதரி வீட்டில் ஒரு விழா என்று அழைத்து வந்துள்ளார். ஆனால், அங்கு செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த அப்பெண்ணிடம் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதியும் அளித்துள்ளார்.

ஆனால் அதற்கு பிறகும் திருமணம் செய்வதை தட்டிக்கழித்துள்ளார். மேலும், வேறு யாரையும் திருமணம் செய்தால் உன் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின், தன்னுடைய அடுத்த படத்திற்கு ரூ.20 லட்சம் பணம் வேண்டும். அதை கொடுத்தால் மட்டுமே உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். விவரம் அறிந்த சுப்ரமண்யா தலைமறைவாகி விட்டார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு பொலிசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா? தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்..!!
Next post ஐயயோ!!! இந்த சிறுவர்கள் செய்யும் வேலையை பாருங்கள்..!! (வீடியோ)