‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா..!!
‘கபாலி’ விஷ்வந்த், ரித்விகா, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், அம்ருதா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’. ஜே.பி.ஆர். இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசை அமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி கூறிய இயக்குனர் ஜேபிஆர்…
“இது குழந்தைகள் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். திரில்லர், திகில் கலந்த கதையம்சம் கொண்டது. குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறவர்களை மனம் திருந்த வைக்கும்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நாயகி ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். இதில் முக்கியமான பாத்திரத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் நடித்திருக்கிறார். அவரை நாயகி கீழே தள்ளி நெஞ்சில் காலால் மிதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கினேன்.
இந்த காட்சியை விளக்கி சொன்னபோது, “இயக்குனர் வெங்கடேஷ் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் அவரை நான் எப்படி காலால் மிதிப்பது?” என்று கூறி ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். உடனே வெங்கடேஷ் ரித்விகாவை கூப்பிட்டு ‘தயங்காமல் நடியுங்கள்’ என்று சமாதானப்படுத்தினார். அதன்பிறகு தான் மனதை தேற்றிக்கொண்டு ரித்விகா நடித்தார்.
குழந்தைகள் கடத்தல் விழிப்புணர்வு படமாக தயாராகி இருக்கும் இந்த படம் அரசு விருதை பெறும் என நம்புகிறேன்” என்றார்.
Average Rating