வசந்தி இல்லாத உலகில் நான் இருக்கமாட்டேன்: மனைவியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட கணவன்..!!

Read Time:2 Minute, 21 Second

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்- வசந்தி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வசந்தி அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.கடந்த மாதம் சூப்பர்மார்க்கெட் உரிமையாளரின் வீட்டின் நகைகளை காணவில்லை என்றும் அதனை வசந்தி தான் எடுத்துள்ளார் எனவும் அவர் மீது திருட்டுபட்டம் சுமத்தப்பட்டது.

இதனால் மனவேதனையடைந்த வசந்தி, இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைகேட்ட மணிகண்டன், இனிமேல் நீ வேலைக்கு போகவேண்டாம் என வசந்தியிடம் கூறியுள்ளார். இருப்பினும் வேதனை அடைந்த வசந்தி, கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன் இரு பக்க கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதன் அடிப்படையில் கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மனைவி சுகிலா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், வசந்தி இல்லாத உலகில் என்னால் வாழ இயலாது, அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை என்று வசந்தியின் பெற்றோரிடம் புலம்பி தவித்த மணிகண்டன் தனது மனைவியின் கல்லறையிலேயே விஷம் குடித்து இறந்துபோனார்.இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா..!!
Next post எனது ஆணுறை விளம்பரத்தை பார்த்து பயப்படும் அரசு – ராக்கி சாவந்த் ஆவேசம்..!!