எனது ஆணுறை விளம்பரத்தை பார்த்து பயப்படும் அரசு – ராக்கி சாவந்த் ஆவேசம்..!!
இரவு 10 மணிக்கு மேல்தான் ஆணுறை தொடர்பான விளம்பரங்களை டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பகலில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
இதுபற்றி இந்தி நடிகை ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டி…
“ஒரு சமூக சேவையாக நினைத்துதான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன்.
ஏற்கனவே. சன்னி லியோன், பிரபாஷா பாசு ஆகியோர் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். அப்போது அதை அரசு தடை செய்யவில்லை. நான் நடித்த ஆணுறை விளம்பரம் பிரபலமானது. அனைவரும் அது பற்றி பேசினார்கள். உடனே காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது.
என் விளம்பரத்தை பற்றி கேட்டதும் அரசுக்கு அவ்வளவு பயமா? அப்படி அரசுக்கு என்ன பிரச்சினை? என்னை குறி வைத்தே இந்த விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எனக்கு ஆதரவளித்து இந்த முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்”.
Average Rating