சல்மான் கான் எப்போதுமே என் மகன்: தர்மேந்திரா நெகிழ்ச்சி..!!
Read Time:1 Minute, 17 Second
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வருகைக்கு முன்னர் இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவர் தர்மேந்திரா. தற்போது 82 வயதாகும் இவர், கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ‘பியார் கியா தோ டர்னா கியா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தனது பிறந்தநாளை கொண்டாட பன்வேல் பகுதிக்கு சென்ற சல்மான் கான், அருகாமையில் லோனாவாலா பகுதியில் உள்ள தர்மேந்திராவின் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ மற்றும் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள தர்மேந்திரா, ‘எனது பண்ணை வீட்டுக்கு வந்த உங்களது ஆச்சரியமான வருகையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் எப்போதுமே எனது மகனாக இருப்பீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Average Rating