26 வெட்டுகளுடன் தப்பிப் பிழைத்த பத்மாவதி – பெயரிலும் மாற்றம்..!!

Read Time:3 Minute, 56 Second

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

முன்னதாக, பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் சில விபரங்களை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த விண்ணப்பத்தை தணிக்கை வாரியம் திருப்பி அனுப்பி விட்டது.

பத்மாவதி படம் வழக்கமான 2D எனப்படும் இரு பரிமாண வடிவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், வியாபார உத்தியாக இப்படத்தின் ஒரு டிரெய்லர் 3D-யில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பையடுத்து பத்மாவதி படம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 2D-யில் இருந்து 3D-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த புதிய 3D வடிவ பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் உள்ள மத்திய தணிக்கை வாரியத்திடன் புதிய விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தை தணிக்கை செய்ய வரலாற்று ஆய்வாளர்கள், ஆன்மிக தலைவர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 28-ம் தேதி படத்தை பார்த்தனர்.

பின்னர், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்கும்படியும், படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையின்போதும் ‘பொறுப்பு துறப்பு’ (Disclaimer) அறிவிப்பு இடம்பெற வேண்டும். படத்தின் தலைப்பை ‘பத்மாவதி’ என்று மாற்ற வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் UA முத்திரையுடன் சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #Padmavat #CBFC

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஓவியாவின் நடனம்… வைரலாகும் காணொளி..!!
Next post நோய் வராமல் காக்கும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம்..!!