பிரபல இயக்குனர்களை சுட்டுப் பிடிக்கும் அதுல்யா ரவி..!!

Read Time:2 Minute, 0 Second

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது

செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது.

இந்தக் கூட்டணியில் தற்போது அதுல்யா ரவியும் இணைந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் அதுல்யா ரவியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி, தற்போது ‘ஏமாலி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..!! (வீடியோ)
Next post குடிபோதையில் இந்த நபர் ஆடிய ஆட்டத்தை பாருங்க….வாடி பொட்ட புள்ள வெளியே..!! (வீடியோ)