மேற்கு நாடுகளில் புலிகளை கைது செய்யும் பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரம்

Read Time:9 Minute, 34 Second

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல்வேறு முன்னணி மேற்கு நாடுகளிலும் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பை மட்டுமன்றி அதற்கு ஆதரவாக நிதிசேகரிப்பு, பிரசாரம் போன்ற செயற்பாடுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டன. இதன் பின்னர் மேற்படி நாடுகளில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொலிஸ் பிரிவினர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிரமுகர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளையும் தேடி பரந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களைப் பெருந்தொகையில் கைது செய்ததுடன், அவர்களால் நடத்தப்பட்டு வந்த அமைப்புகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் செயற்பாட்டு மையங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் “”சீல்’ வைக்கப்பட்டன.

இவ்வாறு ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவு அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவற்றில் ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பகிரங்கமாகவும் பரந்த வகையிலும் நடைபெற்று வந்துள்ளன. அத்துடன், அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமன்றி அந்த நாடுகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள், பிரமுகர்களும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்குப் பெரும் ஆதரவளித்து வந்துள்ளனர். எவ்வாறாயினும் மேற்படி மேற்கு நாடுகளில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்கள் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக உறுதியான பொலிஸ் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த வரிசையில் கடந்தவாரம் இத்தாலியிலும் புலிகள் இயக்கத்தவர்கள், ஆதரவாளர்களுக்கு எதிரான கடும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை இத்தாலியப் பொலிஸார் மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்து வருபவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 33 சிறிலங்கா நாட்டுத் தமிழர்களை இத்தாலியப் பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். இத்தாலியில் தமிழர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் எனக் கருதப்பட்ட சில பிரதேசங்களில் கடந்த 18 ஆம் திகதி மேற்படி பயங்கரவாதத் தடுப்பு விசேட பொலிஸ் பிரிவினர் கடும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே பரவலாக அந்தப் பகுதிகளில் வைத்து குறித்த 33 தமிழர்களையும் இத்தாலியப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்தனர்.

இதற்கேற்ப இத்தாலியில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பலமாக இருக்கும் நாபொலி எனப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளின் போது கூடுதலான புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாபொலியில் 28 பேரும் சிசிலி மற்றும் பிரதேசங்களில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாதாந்தம் அங்கு வாழும் தமிழர்களிடம் பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்காக பெருந்தொகையான யூரோ பணத்தை சேகரித்துள்ளனர் எனவும் இவ்வாறு நிதிசேகரிப்பு நடவடிக்கையில் அவர்களில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களைக் கைது செய்ததாகவும், இத்தாலியில் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கெதிரான விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவினர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட முக்கிய தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கேற்ப இத்தாலியில் பலர்மோ என்னும் முக்கிய நகரத்திலேயே புலிகள் இயக்கத்தின் பிரதான நிதிசேகரிப்பு அலுவலகம் அமைந்திருந்ததாகவும் இதனைத் திடீரென்று சுற்றிவளைத்த விசேட நடவடிக்கைப் பிரிவினர் அங்கு நிதிசேகரிப்பு சம்பந்தப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தினரைக் கைதுசெய்தனர். இவ்வாறு இத்தாலியின் முக்கிய நகரங்களான நாபொலி, ஜெனோவா, டியெல்லா, அலர்மோ பொலொன்நோ, றெஜியோ, எமிலியா ஆகிய நகரங்களில் சுமார் 200 விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை தேடும் பெரும் எடுப்பிலான தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை கடந்த 18 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். மேலும், இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு முக்கிய இடம்கொடுத்து இத்தாலிய நாட்டு முன்னணித் தொலைக்காட்சி ஒன்றில் நேர்முக வர்ணனை போன்று நாள் முழுவதும் பிரபல செய்தி அறிவிப்பாளரின் விமர்சனங்களுடன் ஒளிபரப்பப்பட்டன. இதன்மூலம் குறித்த இத்தாலியத் தொலைக்காட்சி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கெதிரான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு பரந்த பிரசாரத்தை வழங்கியுள்ளது.

அத்துடன், மேற்படி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்காக நிதிசேகரிப்பதில் ஈடுபட்டிருந்து கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியில் தொழிலுக்கென வந்துசேர்ந்த சிறிலங்கா நாட்டுத் தமிழர்களே எனவும் இவர்கள் அங்கு பல்வேறு வேலைத் தளங்களில் தொழில் செய்துவரும் அதேவேளை, இவ்வாறு புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளிலும் நெடுங்காலமாக ஈடுபட்டுவந்துள்ளனர் என இத்தாலிய ஊடகத்தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து இத்தாலியின் ஏனைய சந்தேகத்துக்கிடமான பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வேறும் சில விசேட பொலிஸ் குழுக்களையும் இத்தாலிய பொலிஸ் திணைக்களம் அமைத்து சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து மேற்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக சட்டபூர்வமாகத் தடை செய்ததுடன் அதற்கு ஆதரவான செயற்பாடுகளையும் தடைசெய்தன. இதன் தொடர்ச்சியாகவே இத்தாலிய அரசும் புலிகள் இயக்கத்தை அந்த நாட்டில் தடை செய்திருந்தது. தற்போது கடந்தவாரம் இத்தாலிய அரசு புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளை வெகுவாக இறுக்கியுள்ளதை மேற்படி சம்பவங்கள் தெரிவித்துள்ளதாக இத்தாலி ஊடகங்கள் கூறியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும்
Next post மெக்சிகோ: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி