தெருவில் குத்து ஆட்டம்போட்ட இந்திய வீரர்கள்: வீடியோ..!!

Read Time:2 Minute, 9 Second

இந்திய கிரிக்கெட் அணி 56 நாட்கள் சுற்றுப் பயணமாக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் உள்ள நியூலேண்டில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கடந்த 29-ந்தேதி கேப் டவுன் சென்றடைந்தது.

இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று இந்திய வீரர்கள் தங்களது மனைவிகளுடன் கேப் டவுனில் உள்ள பிரபல கடை வீதிக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கினார்கள்.

புத்தாண்டு பிறக்க சில மணி நேரங்களே இருந்ததால் தென்ஆப்பிரிக்க இசைக் களைஞசர்கள் முக்கியமான வீதிகளில் மியூசிக் இசைத்து ஆடிப்பாடி சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கேப் டவுனில் உள்ள முக்கிய வீதியில் இதைக் கண்டதும் விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் உற்சாகம் அடைந்தனர். பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லாததால் இருவரும் இசைக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்தினார்கள்.

இந்த வீடியோ சமூக இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டம் போட்டி பின்னர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ஏராளமான பொருட்களை வாங்கி குவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த வேடத்திலும் நடிப்பேன் -பூமிகா..!!
Next post எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்..!!