சினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன்ராஜா..!!

Read Time:2 Minute, 32 Second

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவருக்கு தரமற்ற உணவுப் பொருளால் குழந்தையை பறி கொடுத்து விட்டு, அது தரமற்ற உணவு என்பதை நிரூபிக்க தானே அதை உண்டு தன்னை வருத்திக் கொள்ளும் பாத்திரம்,

இதில் நடிக்க சினேகா 18 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் இடம் பெற்றன. இதனால் சினேகா வருத்தம் அடைந்தார். கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக குறைபட்டு இருந்தார்.

இது பற்றி கூறிய இயக்குனர் மோகன்ராஜா, “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவருடைய காட்சிகள் மட்டுமல்ல, வேறு சிலருடைய காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு இருக்கிறது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை.

காட்சி அமைப்பின் படி சினேகாவின் கதை 90 நாட்கள் நடப்பதாக இருக்கும். இதற்காக அவர் நிறைய மாற்றங்களுடன் உடைகள் அணிந்து நடிக்க வேண்டியது இருந்தது. முகத் தோற்றத்திலும் நிறைய பல மாறுதல் காட்ட வேண்டியது இருந்தது. அவருடைய காட்சிகளை பெரும்பாலும் தொகுப்பாக காட்டும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது.

இதனால் தான் சினேகா அதிக நாட்கள் நடிக்க வேண்டியது இருந்தது. இன்று அவருடைய பாத்திரம் தான் முதலில் பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். என்றாலும், நாங்கள் தவறு செய்து இருப்பதாக கருதினால், மன்னிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்..!!
Next post இன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..!! (கட்டுரை)