புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! (வீடியோ)
பெங்களூரில் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை போல் இந்த ஆண்டும், பெண் மீது பாலியல் அத்துமீறல் அரங்கேறியதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை பெங்களூரின் எம்ஜிரோடு, பிரிகேட் ரோடு பகுதிகள், சர்ச் தெரு ஆகிய பகுதிகளில் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் கூடுவர். கடந்த 2017 புத்தாண்டு கொண்டாத்தில் இளைஞர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்தாண்டை போல் விபரீதம் ஏதும் நடக்காமல் தடுக்க 15 ஆயிரம் காவலர்கள் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை மீறியும் பிரிகேட் சாலையில் பெண்ணிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் அழுதுகொண்டு சாலையில் ஓடியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை, இது குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
Average Rating