பெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்?..!!

Read Time:2 Minute, 51 Second

பல ஆண்கள் இந்த சூழ்நிலையை தாண்டி வந்திருப்பார்கள். உறவு இனிமையாக சென்று கொண்டிருக்கும் போது, தன் மனைவிக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவது எந்த ஒரு ஆணுக்கும் மன சஞ்சலத்தை கொடுக்கும். ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபாடுகள் இருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் உடலுறவை தவிர்க்கின்றனர். அந்த காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. உடல் அசதி
பெண் தனது அலுவலத்தில் அதிக நேரம் வேலை செய்து கொண்டுவரலாம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததால், மிகவும் களைப்பாக உணரலாம் அல்லது வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கலாம். இந்த காரணங்களால் ஒரு பெண் தனது துணையிடம் உடலுறவு வேண்டாம் என கூறலாம்.

2. வலியை தரக்கூடியது
பல பெண்கள் உடலுறவை வேண்டாம் என்று கூறுவதற்கு காரணம், அவர்களுக்கு உடலுறவின் போது உண்டாகும் வலி தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, ஆண்கள் உடலுறவுக்கு முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது உதவியாக இருக்கும்.

3. காதலை வெளிப்படுத்த முடியாமை!
பெண்கள் உடலுறவில் மகிழ்ச்சியாக ஈடுபட அவர்களுக்கு அதீத காதலை ஆண்கள் பரிசாக தர வேண்டியது அவசியமாகிறது. பெண்கள் முதலில் உங்களுடன் உணர்வு பூர்வமாக இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

4. ஹார்மோன் பிரச்சனைகள்
மேனோபாஸ் மட்டுமே பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கான காரணமாக இருக்க முடியாது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போவது, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை கூட ஹார்மோன் சமநிலையற்று போவதற்கு காரணமாகி, உடலுவில் ஈடுபாடு இல்லாமல் போகச்செய்கின்றன.

5. உணர்வு மாறுபடுகிறது
குழந்தைகள் பிறந்த பின்னர் உடலுறவில் முன்பு இருந்த அதே அனுபவம் பெண்களுக்கு இருப்பது இல்லை. குழந்தைகள் வந்த பின்னர் கணவன் மனைவிக்குள் இருக்கும் தனிமை பறிபோகிறது. பெண்ணுறுப்பில் உண்டாகும் மாற்றங்களினால் அவர்களுக்கு உடலுறவில் உள்ள ஈடுபாடு குறையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய பெண்..!! (வீடியோ)
Next post சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆக்ஸிஜன் பேஷியல்..!!