சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆக்ஸிஜன் பேஷியல்..!!
ஆக்ஸிஜன் பேஷியல் சிறந்த மாய்சரைசராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படும் பட்சத்தில் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். அதோடு இறந்த செல்களை நீக்கிடுவதால் மாசுமருவற்று பொலிவுடன் காணப்படும். இது உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் அழுக்குகள் எல்லாம் நீங்குவதோடு எண்ணெய் சுரப்பும் குறைகிறது. இதனால் பருக்கள் வரும் என்ற அச்சம் தேவையில்லை.
ஆக்ஸிஜன் பேஷியல் உங்களை இளமையுடன் இருக்கச் செய்திடும். வயதாவதை உணர்த்தும் வகையில் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் வராமல் செய்திடும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமம் டைட்டாக இருக்கச் செய்கிறது. இதனால் சுருக்கங்கள் வருவது குறையும்.
ஆக்ஸிஜன் பேஷியல் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, ரத்தஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும். இதனால் எப்போதும் முகத்தில் தோன்றும் நிறமாற்றங்கள்,பரு,வறட்சி போன்றவை இல்லாமல் பொலிவுடன் காணப்படும்.
Average Rating