விஜய் 62 படத்திற்காக தனது முதற்கட்ட வேலையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்.!!

Read Time:2 Minute, 20 Second

மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கான முதல் போட்டோஷீட் ஏ.வி.எம். ஸ்டூடியோஸில் நடந்தது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்தார். விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷீம் போட்டோஷீட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, விஜய்யுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். முருகதாஸ் ரொம்பவும் அமைதியானவர். அவருடனும், ஏ.ஆர்.ரஹ்மானுடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்தில் யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆக்ஸிஜன் பேஷியல்..!!
Next post ஹர ஹர மகாதேவகி: திருமணத்தில் மொத்தக் குடும்பமும் அரங்கேற்றிய நடனம்..!! (வீடியோ)