கடைசியாக அரசியல் படம் ஒன்றில் நடிக்கும் ரஜினிகாந்த்?..!!

Read Time:2 Minute, 30 Second

ரஜினிகாந்த் நடிப்பில் `2.0′ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா’ படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா’ படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினி அடுத்ததாக அரசியல் சம்பந்தப்பட்ட படமொன்றில் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அரசியல் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறப்படுகிறது. பா.இரஞ்சித், ஷங்கர் ஆகிய இருவரில் ஒருவர் அந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அது `முதல்வன் 2′ படமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் அவரது அரசியல் வேரை தமிழகத்தில் மேலும் ஊன்ற ரஜினி திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைக்கு புத்தாண்டு பரிசை பாடல் மூலம் கொடுத்த தாய்..!! (வீடியோ)
Next post தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது..!!