சீனாவில் செல்போன் வைத்திருப்போர் 40 கோடி
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட சீனா, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தொலைதொடர்பு வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே மாத புள்ளி விவரப்படி சீனாவில் 40 கோடி பேர் செல்போன் இணைப்பு பெற்றுள்ளனர். அதேநேரத்தில் லேன்ட் லைன் தொலைபேசி வைத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மே மாதத்தில் மட்டும் 8 லட்சம் லேன்ட் லைன் சந்தாதாரர்கள் தங்களது இணைப்பை சரண்டர் செய்துள்ளனர். மே மாத இறுதியில் லேன்ட்லேன் தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 21.5 கோடி. சீனாவில் அரசு துறையைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் தொலை தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அண்மையில் தொலை தொடர்புத் துறை சீரமைக்கப்பட்டது. இந்தியாவிலும் செல்போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் விரைவில் சீனாவை முந்தி முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating