அஜித் படத்தில் நானா? எனக்கே இன்னும் தெரியல- இசையமைப்பாளர் சாம்..!!

Read Time:2 Minute, 7 Second

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது, ‘விக்ரம் வேதா’ படம் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதனால், ரசிகர்கள் பலர் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் தனது டுவிட்டர் பக்கத்தில், “தொடர்ந்து வரும் வாழ்த்துக்களால் திகைத்து போயிருக்கிறேன். என்னிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நான் ‘விசுவாசம்’ படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. இன்னும் உறுதியாகவில்லை. நான் பெரிய தல ரசிகன். கண்டிப்பாக எதிர்காலத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பேன், ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன். காத்திருங்கள், ஒரு சிறப்பான செய்தி வரவிருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் காலங்களில் பெண்கள் செய்யும் தவறுகள்..!!
Next post பாகிஸ்தானில் இருந்து இன்று 147 இந்திய மீனவர்கள் விடுதலை..!!