பொங்கலில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்…!!

Read Time:1 Minute, 56 Second

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் – தன்யா ஹோப் – வித்யா பிரதீப் – ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் `தடம்’படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் தற்போது `தடம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசரை பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை இயக்கியவர். “வித்தியாசமான கதை களத்தில் ‘`தடம்’’ பிரமாண்டமாக தயார் ஆகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல் `தடம்’ படமும் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணாநிதி – ரஜினி சந்திப்பு: தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா?..!! (கட்டுரை)
Next post தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார்…!!