ஒபாமாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பில் கிளின்டன் அறிவிப்பு

Read Time:1 Minute, 27 Second

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஒபாமாவுக்கு பில் கிளின்டன் ஆதரவு அளிப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் போட்டியின்போது பில் கிளின்டனின் மனைவியான ஹிலாரி கிளின்டன் பராக் ஒபாமாவை கடுமையாக சாடியிருந்தார். இருப்பினும் அப்போட்டியில் ஹிலாரி தோல்வியடைந்ததையடுத்து, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக ஹிலாரி தெரிவித்துள்ளார். ஒபாமாவும், ஹிலாரியும் வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓய்வு பெறுகிறார்: ைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான பில்கேட்ஸ்
Next post கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்