கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

Read Time:1 Minute, 28 Second

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது. விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பில் கிளின்டன் அறிவிப்பு
Next post நீண்ட ஆயுள் தரும் வைட்டமின் “டி”