மூதூரில் 17பேர் படுகொலை விடயம் பிரான்ஸ் சர்வதேச மயப்படுத்தும்..

Read Time:2 Minute, 22 Second

2006 ஓகஸ்டில் மூதூரில் மனிதாபிமான பணியாளர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக பிரான்ஸ் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன பிரான்ஸை தளமாக கொண்டியங்கும் பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற தொண்டர் அமைப்பின் உள்ளூர் மனிதநேயப் பணியாளர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தனர் இந்தப் படுகொலையை ஒட்டி மேற்படி அமைப்பு பிரான்ஸ் அரசிடம் விடுத்த வேண்டுகோளின் பின்னரே பிரான்ஸ் அரசு இதுகுறித்து தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது எனத்தெரிவிக்கப்படுகிறது மூதூர் படுகொலை விடயத்தை சர்வதேச விசாரணை நீதிமன்றம் முன்கொண்டுவருவதற்காக அதற்கு உலகநாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னட் குச்சினர் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பை எதிர்வரும் முதலாம் திகதி ஏற்ற பின்னர் இதற்கான முயற்சிகள் தீவிரமடையலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது பட்டினிக்கு எதிரான அமைப்பு மூதூர் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரி ஆரம்பித்துள்ள மூதூருக்கான நீதி பிரசாரம் பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை பட்டினிக்கு எதிரான அமைப்பின் ஊடக அதிகாரி குரொஸ்ஜீன் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான பிரசாரத்தை தாங்கள் மேலும் தீவிரமாக்கப்போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 150 LTTE cadres including child soldiers killed in one month – LTTE posters reveal
Next post கட்சித் தலைமையிலிருந்து ரணில் பதவி விலக வேண்டும் -லக்பிம நாளேடு செய்தி