வவுனியா சிராட்டிக்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதல்.. புலிகளின் இருபத்தைந்து சடலங்கள் மீட்பு! புலிகளின் நிலத்தடி பாரிய முகாம் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்!!
வவுனியா சிராட்டிக்குளத்தில் நேற்றுமாலை 6மணியளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பில் 25பேர் கொல்லப்பட்டுள்ளனர். சடலங்கள் அனைத்தையும் படையினர் மீட்டுள்ளனர். ரி56 துப்பாக்கி 16, 12.7 தர ஆயுதம் 01, ஆர்.பி.ஜி 02, எல்.எம்.ஜி 01 என்பனவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா சிராட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல்களின் போது பலியான புலிகளில் ஒருவரின் சடலம் இன்றுகாலை 6மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலத்துடன் அப்பகுதியில் இருந்து புலிகளின் 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. சீரட்டிகுளத்தில் மோதல்களையடுத்து புலிகளின் நிலத்தடி பாரிய முகாமொன்றையும் படையினர் மீட்டுள்ளனர். அதற்குள் குளியலறை, மின்சாரம், மார்பிள் பதிப்பு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதாக படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது.
2 thoughts on “வவுனியா சிராட்டிக்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதல்.. புலிகளின் இருபத்தைந்து சடலங்கள் மீட்பு! புலிகளின் நிலத்தடி பாரிய முகாம் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
you are not support the SLA Because They are singhelese Now you supporting You dont know the world freedom fighters history Around the world every where same like Ettapans (Same Like You) In 1900 also they are Killed Tamil Peoples If they Killed One LTTE ( It means one Tamilan ) this is less for one tamil community Dont Forget This Situation Not support LTTE BUT Dont Crititise Tamilans and his Life.
Commentator, remeber the fight of Tamils has been hijacked by LTTE,its a fight of LTTE survival. Our freedom struggle will recommence, once LTTE is wiped out