சிறுமிகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில் 300 பேர் கைது
அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில், சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லாரி போக்குவரத்து மிகுந்த பகுதிகளில், இந்த வகையான விபசாரம் அதிகமாக நடப்பதாகவும், இன்டர்நெட் மூலமும் சிறுமிகள் விபசாரம் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார், 10 மாநிலங்களில் உள்ள 16 நகர்களிலும், மாவட்ட தலைநகர்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்தியதாக, 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் பயன்படுத்தப்பட்ட 432 சிறுமிகளை போலீசார் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி போலீஸ் டைரக்டர் ராபர்ட் முல்லர் கூறுகையில், “சிறுமிகளின் அறியாமையை பயன்படுத்தி, ஒரு கூட்டத்தினர் இந்த வகையான விபசாரத்தை நடத்தி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து விட்டோம். கைதானவர்கள் மீது கடுமையான சட்டபிரிவுகளின்படி வழக்கு தொடரப்பட்டு, அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது” என்றார்.
Average Rating