By 28 January 2018 0 Comments

உங்க எக்ஸ் லவ்வர் தோழியா? காதலியா?

வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம் எனது போல, காதலில் ப்ரேக்-அப் எல்லாம் இப்போது ஜஸ்ட் லைக் தட் போல நடக்கிறது. முதல் காதல் ப்ரேக்-அப்பில் முடிந்துவிட்டால் சரக்கடிப்பது, தாடி வளர்ப்பது எல்லாம் இப்போது மிகவும் குறைவு. ஏன் எத்தனையோ போட்டிகளில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்’ல் சிறப்பாக விளையாடு போட்டியை வென்றது இல்லையா என்ன? இப்படி கூறி மனதை தேத்திக்கிட்டு போங்க பாஸ்.

ப்ரேக்-அப்பிற்கு பிறகு காதல் வருவது தவறல்ல, ஆனால், முன்னாள் காதலின் தோழி மீதே வருவது தான் தவறு. சரி! வந்திடுச்சே… இப்போ என்ன பண்றதுன்னு கேட்கிறீங்களா… ஒரு சில விஷயங்கள நீங்க கொஞ்சம் பிளான் பண்ணி பண்ணா… பெருசா சேதாரம் இல்லாமா பத்திரமா லேண்டிங் ஆயிடலாம்…

தைரியம்!
முதல் தேவை தைரியம். ஏனெனில், நீங்கள் அவருக்கு ஏற்கனவே பரிச்சியம் ஆன நபர். ஆகையால், நடந்தவற்றை மறைக்க நினைப்பது தவறு. முந்தைய உறவை, உறவில் நடந்தவை பற்றி அவர் கேட்கும் போது உண்மைகளை தைரியமாக கூறுங்கள். ஏனெனில், உங்கள் உறவில் நடந்தவற்றை ஏற்கனவே அவர் அவரது தோழி மூலம் அறிந்திருப்பார். ஸ்மார்ட்டாக காட்டிக் கொள்கிறேன் என, தன்னிலையை நியாயப்படுத்துகிறேன் என உளறிக்கொட்டி சிக்கிக்கொள்ள வேண்டாம்.

நகைச்சுவை!
கசப்பான நினைவுகளை அவர்கள் மேல் கோடிட்டு காட்ட என்றும் தயங்க மாட்டார்கள். ஆனால், அதை முடிந்த வரை நகைச்சுவையாக மாற்றி சூழலை திசைதிருப்பும் திறன் கொண்டிருக்க வேண்டும். உடனே, முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது, இந்த பொண்ணுகளே இப்படி தான் வசைப்பாடுதல் எல்லாம் சரிப்பட்டு வராது. மீண்டும் ப்ரேக்-அப் தான் ஆகும். சோ, பீ கேர்-ஃபுல்!

உடல்மொழி!
நீங்கள் கூறுவது மெய்யா, பொய்யா என்பதை உங்கள் உடலே காண்பித்துவிடும். எனவே, உடல்மொழியை வலுவாக்குங்கள். பொய்யே கூறினாலும் அதை தைரியமாக ஒரு ஃப்லோவாக கூற வேண்டும். ஏனெனில், சில சமயம் தடுமாறும் உண்மையை, வலுவான பொய்கள் வென்றுவிடும். ஏற்கனவே முதல் அனுபவித்தில் காதலியின் தோழியாக அவருடன் கொஞ்சம் பழக்கம் இருக்கும், ஆகையால் அவர் நம்பும்படி பொய் கூறுங்கள். கூடுதலாக நீங்கள் சேர்க்கும் ஒரு சிட்டிகை பொய் கூட, அவர் நீங்கள் கூறுவது பொய் என்பதை கண்டுபிடித்துவிட காரணமாகிவிடும்.

கேளுங்கள்!
ஆண்களிடம் இருக்கும் குறையே, பெண்கள் பேசுவதை கேட்க மாட்டார்கள். கேட்டாலும், அவர்கள் பேசி முடிக்கும் முன் கலாய்த்து விடுவார்கள். இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்து, காதலி பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். அதிலும், இரண்டாம் இன்னிங்ஸ்’ல் மிக கூர்மையாக கேளுங்கள். (இதுல எக்ஸ் லவ்வரோட தோழிய லவ் பண்ணா ஷார்ப்பா கேட்கணும்) நீங்களாக எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். பொறுமையாக முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை!
ஏற்கனவே அந்த பெண்ணின் தோழியை காதலித்து ப்ரேக்-அப் செய்த நபர் நீங்கள். எனவே, இவரிடம் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். துளி அளவும் எல்லை மீறுவதோ, ஒருமுறை தானே என நேர்மை தவறுதல் ஆகாது. நீங்கள் இன்று செய்யும் தவறின் வீரியம் பல நாள் கழித்து வெளிப்படும் போது ஏற்படும் சண்டையில் தெரியும். எனவே, எதற்கும் நீங்கள் செய்ய போகும் செயல்களுக்கு ஒரு ப்ரீ-அப்ருவல் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

ஃப்ளர்டிங் எனும் கலை…
ஃப்ளர்டிங் என்பது ஒரு கலை, அதை அதிகமாக பயன்படுத்தினால் உங்களை மன்மதன் என்பார்கள், காதலியிடம் மட்டும் பயன்படுத்தினால் கெட்டிக்காரன் என்பார்கள். எனவே, உங்கள் இரண்டாம் இன்னிங்ஸ்’ல் இதை காதலியிடம் மட்டும் காண்பியுங்கள். அவரை உங்களை ரசிக்க வையுங்கள். உங்களுடன் இருக்கும் நொடிகளை அவரது நினைவுகளில் சேகரிக்க செய்யுங்கள். இதை நீங்கள் சரியாக செய்துவிட்டாலே போதும், வெற்றிக்கொடியை நாட்டிவிடலாம்.

புதுசு, கண்ணா புதுசு!
என்ன தான் அவரை காதலில் விழவைத்து விட்டாலும், நிலைக்க வைக்க நீங்கள் புதியதாக ஏதேனும் செய்ய வேண்டும். கொடுக்கும் பரிசுகளில் இருந்து, பேசும் விதம் வரைக்கும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும், உங்கள் பழைய காதலை பிரதிபலித்துவிடக் கூடாது. ஏனெனில், நீங்கள் காதலிப்பது உங்கள் எக்ஸ் காதலியின் நெருங்கிய தோழியை. நீங்கள் என்னென்ன, செய்தீர்கள், பேசுனீர்கள் என்பது முற்றிலும் இவர்கள் அறிவார்கள்.

டோன்ட் டிஸ்கஸ்!
உங்கள் எக்ஸ் ரிலேஷன்ஷிப் காலத்தில் இருந்து பொது நண்பர்களுடன் இந்த புதிய உறவில் நடக்கும் செயல்களை பற்றி அதிகம் டிஸ்கஸ் செய்ய வேண்டாம். கண்டிப்பாக இந்த டிஸ்கஷன் முடிவுகள் உங்கள் இந்நாள் காதலியின் செவிகளுக்கு மிக விரைவாக குறுஞ்செய்தியாகவோ, வாட்ஸ்-அப் கால் மூலமாகவே சென்றுவிடும். முடிந்த வரை, உங்கள் இருவர் பற்றிய டிஸ்கஷன்களை முந்தைய உறவுடன் பரிச்சியமான நபருடன் நடத்த வேண்டாம்.Post a Comment

Protected by WP Anti Spam