அளவெட்டி இளைஞர் தெகிவளையில் வைத்து மாயம்
Read Time:39 Second
யாழ். அளவெட்டியைச் சேர்ந்தவரும், தெகிவளை ஆஸ்பத்திரிவீதியில் வசித்து வந்தவருமான 21வயதுடைய அருளானந்தம் விசாகன் என்ற இளைஞர் காணாமற் போயுள்ளார். குறித்த இளைஞர் ஒரு வருட காலமாக கொழும்பில் கட்டுமான கம்பனியொன்றில் பயிற்சியாளராக வேலை செய்து கொண்டிருந்தார் என்றும் கடந்த 24ம் திகதி வெளியில் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லையென்றும் கூறப்படுகிறது.
Average Rating