களுவன்கேணியில் இளைஞர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குற்பட்ட களுவன் கேணியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரி;ன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர் இச்சம்பவம் நேற்று அதிகாலை5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த தங்கவேல் தங்கேஸ்வரன் (வயது24) என்ற இளைஞரே சுடப்பட்டவராவார். சந்தேகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி இராணுவத்தினர் கூறியபோது அவர் அதை நிறுத்தாமல் சென்றமை காரணமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக படையினர் தெரிவித்துள்ளனர் இவரது சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம் சகாப்தீன் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கமாறு உத்தரவிட்டிருந்தார்.
Average Rating