கிழக்குமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தமாதமளவில் வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் கிழக்கு அபிவிருத்தியிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்குமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் குழு தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்து பேசியபோதே இவ் உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். என முதலமைச்சரின் ஊடக இணைப்பதிகாரி ஆசாத் மௌலானா தெரிவித்தார் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், கிழக்கு வேலைத்திட்டங்கள், பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் கிழக்கில் உள்ள பல்வேறு அரச திணைக்களங்களில் அவர்களை நியமிப்பது குறித்து கேட்டுக்கொண்டதற்கு அதுகுறித்து திறைசேரியுடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் கிழக்கின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் மேலதிக நிதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார் எனவும் ஆசாத் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating