தேர்தலில் போட்டியிட சமந்தா திட்டம்!!

Read Time:2 Minute, 22 Second

ரஜினி, கமல் அரசியலில் குதித்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுபோல் ஆந்திரா, தெலங்கானா அரசியலிலும் நடிகர், நடிகைகள் அரசியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு அரசியலில் குதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை சமந்தா மணந்தார். சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் கணவருடன் ஐதராபாத்திலேயே சமந்தா செட்டிலாகிவிட்டார்.

சமூக சேவைகளில் அக்கறை காட்டி வரும் சமந்தாவை சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்டிரிய கட்சி தன் வலைக்குள் கொண்டு வந்திருக்கிறது. அக்கட்சியின் அரசியல் பிரமுகர்களுடன் சமந்தாவும் நட்பாக பழகி வருகிறார். மேலும் தெலங்கானா அரசின் கைத்தறி துறை தூதர் பொறுப்பும் சமந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வரும் 2019ம் ஆண்டு நடக்கும் சட்ட மன்ற தேர்தலில் செகந்தராபாத் தொகுதியில் அவரை களம் இறக்க கட்சி எண்ணி உள்ளது. சினிமா புகழ் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை அரசியலில் இறக்குவதற்கு மாமனார் நாகார்ஜூனா தரப்பிலிருந்து எதிர்ப்பு வராமலிருப்பதற்காக அவரை சமாதானம் செய்யும் வேலைகளை கட்சி பிரமுகர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது குறித்து சமந்தா தரப்பிலிருந்தோ, கட்சி தரப்பிலிருந்தோ உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடை விடுமுறையில் வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்!!
Next post இலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது