மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20 ரவைகள், கைகுண்டு மீட்பு
Read Time:1 Minute, 3 Second
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20தோட்டாக்களும் கைகுண்டொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலுள்ள டீ.சீ மாவத்தையில் உள்ள கராஜ் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்ட வானிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் தொடர்பாக நால்வரை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களில் கராஜ் உரிமையாளரும் வாகன உரிமையாளரும் அடங்குவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.
Average Rating