மாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம்!!

Read Time:1 Minute, 52 Second

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு காலத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக ஏராளமான குறிப்புகளை ஆலோசனைகளாக கூறினார்.

தேர்வுகளை மாணவர்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் போல கருத வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரை நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இதையடுத்து, மோடி மாணவர்களுக்காக ஆற்றிய உரைகளின் தொகுப்பை டெல்லியில் உள்ள பெங்குவின் ரேண்டம் அவுஸ் பதிப்பகம் என்ற ‘எக்சாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

ரூ.100 விலையுள்ள 200 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனைகளாக 25 கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இணையதளத்திலும் இந்த புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குதிக்கும் முன்னணி நடிகை…!!
Next post தைவானில் 2 முறை நிலநடுக்கம்!!