இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!

Read Time:1 Minute, 25 Second

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்லும் விதமாக சீனாவில் டிரோன் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பயணியை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் விமானம் அந்நாட்டின் லீயானி யுகாங் நகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே டிரோன் சேவை அங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை சீனா முழுவதும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.

மின்சார பேட்டரியில் இயங்கும் இதற்கு ஈகாங் 184 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிரோனில் 100 கிலோவுக்கும் குறைவான ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், இதனால் 24 நிமிடங்கள் மட்டுமே பறக்க முடியும். இதனால் அதிவேக குறுகிய தூர பயணத்திற்கு மட்டுமே டிரோன் கை கொடுக்கும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!!
Next post சிறுமியிடம் சில்மிஷம் : போலீஸ்காரர் சஸ்பெண்ட்!!