2 ஆண்டு சண்டையில் 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை தளபதி சொல்கிறார்
இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேகர் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய சண் டைக்கு பிறகு இதுவரை 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். வடக்கு பகுதியில் 7 ஆயிரம் பேரையும், கிழக்கு பகுதியில் 2 ஆயிரம் பேரையும் கொன்று இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் 400-ல் இருந்து 500 பேர் வரை கொன்று வருகி றோம். தற்போது 5 ஆயிரம் விடு தலைப்புலிகள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் 1 வருடத்தில் விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம். இப்போதும் விடுதலைப்புலிகள் எங்களோடு மோதி வருகிறார்கள். ஆனால் முன்புபோல தாக்குதல் வேகம் இல்லை. மரபு வழி சண்டையில் ஈடுபடும் திறனை அவர்கள் இழந்து விட்டார்கள். எங்கள் படைகள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலங்களை கைப்பற்றுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களை ராணுவ ரீதியாக அழிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவோம். வடக்கு பகுதியில் பல நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூர பரப்பளவை கைப்பற்றி இருக்கிறோம். தற்போது கடற்புலிகளின் பிரதான தளம் அமைந்துள்ள விடத்தல் தீவில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலேயே எங்கள் படைகள் உள்ளன. புலிகள் படையில் ஆட்கள் இல்லாததால் இப்போது பள்ளி சிறுவர்களையும் சேர்க்கிறார்கள். கடற்புலிகள், அரசியல் பிரிவு கலைஞர்களும் முன்வரிசைக்கு வந்து போரிடுகிறார்கள். ராணுவ தரப்பில் 2 ஆண்டு சண்டையில் 1700 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1400 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கை ராணுவத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து விடுகிறார்கள். கடந்த ஆண்டு 32 ஆயிரம் பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு இதுவரை 16 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating